பிரித்வி பேரழகி
மலர்கள் ஏதுமின்றித் தன்
கார்க்குழலை சுருள் சுருளாய் மலர்களாய்ப்
பிண்ணியிருப்பாள்
அவற்றைப் பார்க்கும் புஷ்பங்களோ தாம்
அவமானப்பட்டு தலை குனிந்து ஒரு ஓரம் நில்லும்
செவிகள் இரண்டிலும் அவள்
சுவாசிக்கும் நாசிகள் இருபுரமும்
பொட்டு தங்கம் கிடையாது ஏன் அணிவிக்க துளைகளே இல்லை ஆனாலும் அவள் அழகோ அபாரக்
கொள்ளை யோக்கொள்ளை
முகத்திலே யாதொரு அழகு
சாதனத்தின் அறிகுறிகூட
கிடையவே கிடையாது
வித்தை விலக்கிக்கொண்டு வெளியே வரும் வெள்ளைத் தண்டைப் போன்றே அவள் முகம்
கழுத்திலே கரங்களிலே
கால்களிலே இடுப்பிலோ
சிறு தங்கத் துகள்களை கூடகண்டதில்லை
ஆனாலும் அது ஒரு குறைகள் இல்லை
உடுத்திய ஆடைகளோ
கோடைகளில் வெடித்திட்ட
தாவரத்துப் பஞ்சு போல்
பஞ்சமில்லை அவள் மேலே
ஆனாலும் வானலோக அழகி கேள்வி பட்டதுண்டு நேரிலே காணும் பாக்கியம் உண்டோ எவருக்கேனும்