ஓ நட்சத்திரங்களே
ஓஓ நட்சத்திரங்களே!
ஓஓ நட்சத்திரங்களே!!
நானும் உங்களோடு வர விரும்புகிறேன்!!!
என்னைக் கூட்டிச் செல்லுங்கள்...
துன்பம் நிறை உலகில் பிறருக்கு துன்பம் தராவண்ணம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள்...
ஆசைப்படுவதே தவறு...
அந்த ஆசை நிறைவேற பிறரைக் கஷ்டப்பத்துவது தவறு...
மனிதனாய் பிறப்பதே தவறு...
நட்சத்திரங்களே!
என்னைக் கூட்டிச் செல்லுங்கள்...
இயற்கையே!
ஓ இயற்கையே!!
உனக்கும் ஆன்மா உண்டென்று அறிவேன்...
என்னையும் உனது ஆன்மாவோடு கலந்துவிடு...
ஓ காற்றே! என்னைக் கரைத்துவிடு...
நீ கொண்ட அன்பை உணர்கிறேன்...
அந்த அன்பால் என்னைக் கரைத்து உன்னோடு ஐக்கியமாக்கிடு...
ஓ அக்னி!
என்னை விழுங்கத் தயார்...
உன்னில் தஞ்சமடையும் யாவற்றையும் தூய்மையாக்கும் அக்னியே என்னை தூய்மையாக்கு...
இயற்கையே! இவ்வூனுடலை அழித்திடு...
கொடுமைகளிலிருந்து முக்தி கொடு...
ஓ நட்சத்திரங்களே!
ஓ நட்சத்திரங்களே!!
நானும் உங்களோடு புறப்படுவிட்டேன்...
உங்கள் ஒளியை உணர்கிறேன்...
என் மனதில் புகுந்த நட்சத்திரங்களே! என்னை அழைத்துச் செல்லுங்கள்...
மனித வாழ்வென்னும் நரக வாழ்வு எனக்கு தேவையில்லை வஞ்சகர் சூழ் உலகிலே...
ஓ நட்சத்திரங்களே! என்னைத் தூக்கிச் செல்லுங்கள்...

