ஞானத்தின் வழி
#ஞானத்தின்_வழி...
அவரவர் கொண்ட ஞானத்தின் பலனாய் அவரவர் வாழ்க்கை பிரகாசிக்கிறது இருள் சூழ் உலகிலே...
வாழ்க்கைப் பயணம் தொடர நாளுக்கு நாள் கஷ்டமான சூழல் உருவாகத் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உலக மனிதர்களை ஆராய்ந்து சிந்தித்து அறிபவன் அற்புத ஞானியாகிறான் பிரகாசிக்கும் சூனியனைப் போல...
சாதிக்குள் கட்டூண்டு சாதியை ஆராய்ந்தால் சாதியென்பது பெருமையாகத் தோன்றி இரு கண்களை திரையிட்டு மறைப்பதைப் போல் அறியாமை மூழ்கடிக்கிறது ஞானத்தைவிட்டு விலக்கி...
அதுபோல தான் மதம், இனம், நாடு, மொழி, நிறம், பதவி, கௌரவம், அகங்காரம், அழுக்காறு, ஆசை முதலியவையும் திரைகளாக மனிதர்களின் ஞானக்கண்களை மறைக்கின்றன திரைகளாய்...
பன்றியானது சாக்கடையில் பிறந்து, சாக்கடையிலேயே வாழ்ந்து சாக்கடையே சொர்க்கமென்று மடிவதைப் போல,
இவ்வுலக மனிதர்களும் அறியாமை சாக்கடையிலே பிறந்து,
அறியாமை சாக்கடையில் வாழ்ந்து அதுவே சொர்க்கமென்று மடிக்கிறார்கள் ஐந்தறிவுஜீவிகளாய்...
சத்தியம் - அசத்தியம்,
உண்மை - பொய், இப்படி பகுத்தறிய வேண்டிய மனிதர்கள் ஞானத்தின் வழியிலிருந்து தவறிச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள் முன் சென்றவர்களைப் பின்பற்றி...
சிந்தித்துச் செயலாற்றுங்கள்...