வாழ்த்துகிறேன் நண்பா

கோடையைவருடும் குளிர் தென்றலாய்..எந்தன்
கோபத்தை விரட்டும்
நீ திங்களாய், மாறியே மாரியென
என்னை நனைத்தாயே..
மாறாத உன் அன்பில்
கண்டேனே என் தாயை..
இன்றுபோல் என்றும் நீ
இன்பமாய் இருக்க..என்
போன்ற
களைகளை கலைத்திடு
நீ சிறக்க..

எழுதியவர் : கு.தமயந்தி (3-Jul-17, 6:36 pm)
சேர்த்தது : குதமயந்தி
Tanglish : vazhthugiren nanbaa
பார்வை : 75

மேலே