நீயே எழுதுவதைபோல் எழுதி அனுப்பிவிட்டாய்

ஒன்றிரெண்டு கவிதைகள் நீ எழுதி
எனக்கு அனுப்புகையில் சந்தேகமாய்த்தான்
இருந்தது !
மார்பு சாய்ந்து தூங்குவதைபோல் நடித்து
இதயத்தில் உனக்காய் ஒலித்து கொண்டிருந்த
கவிதைகளை ஒட்டுக்கேட்டு
நீயே எழுதுவதைபோல் எழுதி
அனுப்பிவிட்டாய் !