காதல்

மயன் வடித்த தங்கப் பதுமை
ஒன்று, பிரமன் உயிர்த்தந்திட
மண்ணில் வந்து உலாவ வந்ததுவோ
இதோ என் முன்னால் நின்று
கொண்டிருக்கும் இந்த பேரழகி

அச்சோ!, அது என்ன கூந்தல்
அவள் கூந்தல் -கார்மேகக் கூந்தல்
குழல் குழலாய் அலைமோத
வடிவான அவள் இளந் தோளில்
சதிர் ஆட்டம் போடுது

அச்சோ! அச்சோ ! அது என்ன
விழிகள் அவள் விழிகள் காமனையும்
மயக்கும் மான் தந்த விழிகள்

இன்னும் பார்த்தேன் அவள்
அழகிய நீண்ட மூக்கு அதன்
முடிவில் பச்சைக்கல் மூக்குத்தி
ஒரு தாரகையோ என மின் மினுக்க

அச்சோ ! அதோ கண்டேன் அவள்
இரு அதரங்கள்,குவிந்த சிவந்த
தாமரை மொட்டென கண்டேன்
இப்போது அந்த மொட்டும் சற்றே
அலர்ந்தது அதனுள் முல்லைச்சரங்கள்
இரண்டு மேலும் கீழும் அவள்
பற்களாய் வந்தமைய-அவள் சிரிக்க
அந்த மெல்லிய சிரிப்பொலி காற்றில்
ஒரு கீதம் இசைத்ததுவோ !

அச்சோ, அந்த வண்ண கழுத்தின் கீழ்
சிவப்பு பட்டாடை கச்சை-அது
பக்குவமாய் இரு வண்ண கலசங்களை
மறைத்தும் மறைக்காமலும் இருந்து
ஓர் எழில் தந்திருக்க -அதையும்
மூடி ஓர் பெண்ணோவியம் போல்
காட்டுது நீல பட்டு சிற்றாடை

அச்சோ அச்சோ அவை என்ன
நீண்ட வாழை தண்டொத்த கால்கள் இரண்டு
தங்க சிலம்புகள் இரண்டு கட்டப் பட்டு
தங்கப் பதுமை அவள் அன்ன நடம் பயில
ஜெல் ஜெல் என்று ஓசை எழுப்ப -என் மனம்
மயங்கி அந்த ஓசை தந்த கால்கள்
இவை என்ன தேவதை கால்களோ என எண்ணி
வாய் திறந்து நிற்க ........................

நான் காண்பது என்ன கனவா நினைவா
என்று நானும் என்னைக் கிள்ளி பார்க்கையில்
என் முன் அசைந்தாடி செல்லும் வனிதை
மண்ணில் உலாவும் மயன் தந்த ரம்பை
என்று தெளிந்தேன் மனதில் ஒரு
சிறு ஏக்கத்துடன் -

அச்சோ, அச்சோ, இந்த பேரழகி
என்னவளாய் வந்தமைந்தால்
இந்த மண்ணில் நான் அல்லவோ
பிரேம சாகரன்.................!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-17, 3:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 215

மேலே