கொல்வதும் வெல்வதும்

உன் பார்வையால் என்னை கொல்வதும் !
என் அன்பினால் உன்னை வெல்வதும் !
உன் அழகால் என்னை கொல்வதும் !
என் கவிதையால் உன்னை வெல்வதும் !
உன் நினைவால் என்னை கொல்வதும் !
உன் கனவில் நான் உன்னை வெல்வதும் !
உன் புன்னகையால் என்னை கொல்வதும் !
என் ஆண்மையால் உன்னை வெல்வதும் !
கொல்வதும் வெல்வதுமாய் இருக்கிறோம் !
காதல் தான் நம் இருவரையும் கொல்கிறது !
காலமும் இப்படியே நகர்ந்து செல்கிறது !

எழுதியவர் : முபா (5-Jul-17, 1:39 pm)
பார்வை : 302

மேலே