கடவுள் மீது குற்றச்சாட்டு...


எம்மக்களின் இரத்தவெள்ளம் காண்பதற்கா.....

என்னிரு விழிகளையும் காணச்செய்தாய்....?

எம்மக்களின் கதறல் ஓலம் கேட்பதற்கா.....

என்னிரு செவியையும் கேளச்செய்தாய்....?

எம்மக்களின் சடல நாற்றம் வாசம் அறியவா....

சுவாசம் தந்தாய்....?

என் இன இரங்கலை அறிவிக்கவா......

என் ஆதாரம் படைத்தாய்... ?

எம்மக்களை கட்டியணைக்க எத்தணித்த....

என்னிரு கைகளையும்....

அவர்களை காப்பாற்ற துடிதுடித்த.....

என்னிரு கால்களையும்.....

வேண்டுமென்றே தானே நீ நுடமாக படைத்தாய்?

என்ன ஒரு நயவஞ்சகன் நீ..........

உனக்கு மட்டும் வித வித படையல்...

எம்மக்களோ இங்கு பட்டினியில்...

நீயோ பட்டாடையில் பவனி வர.....

எம்மக்களுக்கோ அங்கமே ஆடையாய்...

என்ன நியாயம் இது....?

உன்னை குற்றவாளிக்கூண்டில்....

ஏற்றும் நாள் வெகு தூரமில்லை....

அதற்குள் நீதி கூறி விடு...

உன்னை விடுவிக்கிறேன்...

எழுதியவர் : a.buvaneswari (19-Jul-11, 7:14 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 637

மேலே