இறைவனின் படைப்பில்

எத்தனை அதிசயம் இறைவனின் படைப்பில்

எந்த நாட்டில் பிறந்தாலும் மழலை

அவரவர் தாய் மொழி அது பேசும்

கேட்கையில் மனதில் கேள்வி எழும்

யார் அதற்க்கு சொல்லி வந்ததென்று

விழிகளால் காணும் காட்சிகளால்

ரசித்து நாம் கழித்துவிட்டோம்

நம் விழிகளை நாமே காணும்

முயற்சியினை ஏன் நாம் விட்டு விட்டோம்

முயற்சி கொண்டு நாம் கண்டால்

இறைவனின் குடிலை கண்டிடலாம்

இருந்தும் நமக்கு வழி இல்லை

நம் விழியை நாமே காண

மனிதனே மனிதன் படைபதுவும்

இறைவனின் ஒரு வினைதான்

காமம் கொண்டு பாராமல்

அறிவு கண் கொண்டு பார்த்துவிட்டால்

இறைவன் படைப்பில் அதிசயம்தான்

கண்கள் மீண்டும் பொருத்தி விடலாம்

காது மீண்டும் கேட்க்க வைக்கலாம்

ஊமை நாமும் பேச வைக்க நம்மால்

ஏன் முடியவில்லை

குரல் வழி இறைவன் இருப்பதனால்

இன்னும் பல அதிசயம் உண்டு

இறைவனின் படைப்பில்

எழுதியவர் : rudhran (19-Jul-11, 7:48 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 480

மேலே