வாழ்ந்துபார்


அனுபவம் கொடுக்கும்

அறிவே தொடக்கம்

அகிலம் உனகென்று வாழ்ந்து பார்

இளமை துடிக்கும்

தோல்வியில் வெடிக்கும்

அது நிரந்திரமல்ல வாழ்ந்துபார்

ஒருமுறை வாழ்க்கை

ஒரு முறை மரணம்

கடைசி நொடி வரை வாழ்ந்து பார்

எதுவும் உனதில்லை

உன்னுடன் இருப்பதும் உனதில்லை

உண்மைகள் அறிய வாழ்ந்துபார்

கேள்விகள் ஜனிக்கும்

பதில் கிடைக்கும் வரைக்கும்

முயற்சிதான் வாழ்க்கை வாழ்ந்துபார்

மறிப்பது பெரிதல்ல

மரணமும் பெரிதல்ல

நல்ல மனிதனாய் நீயும்

வாழ்ந்துபார்

எழுதியவர் : rudhran (19-Jul-11, 8:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 482

மேலே