ஒரு ரூபாய்
வரிசையில் காத்திருந்து
அடுக்கி வைத்திருந்த
ஒருரூபாய் நாணயத்தை
ஒவ்வொன்றாய் போட்டு
பேசித்தீர்த்த கதைகளில்
விடுபட்டுப்போன கதைகளை
நினைத்து ஐயோவென
வெறுங்கையை பார்த்து
நகத்தை கடித்தபடி
நகர தொடங்கிய
நிமிடங்களின் சுகம்
நிச்சயமாய் இல்லை
நீளும் நிமிடங்களோடு
நம்மோடு தொடரும்
கைபேசி அழைப்புகள் !!
யாழினி வளன்....