மனநோயாளி
வீங்கிய வயிற்றோடு
வீதியில் வீற்றிருக்கிறாள்..!
வீச்சுச்சகதி பூசி சடங்கு நடக்கிறது..!
வீணர்கள் எவரோ புசித்துப்புணர்ந்து
வீசியவளவள் வயிறு நிரம்பியிருக்கிறது..!
கல்லாகிப்போன கடவுளுக்கு
மனு கொடுக்கவேண்டுமென்றுதான்
கருவை சுமந்து கொண்டு
காகிதங்களை
சேகரித்துக்கொண்டிருக்கிறாளோ??
வீரியமற்ற விசனக்காரி..!
(பைத்தியக்காரி)