தமிழன்டா

வேறுபட்ட
நிறம்
மாறுபட்ட
கொள்கை அரசியல்....!!

வாக்குரிமை
விலை பேசும்
வாடிக்கை
வேடிக்கை அரசியல்...!!

மக்களின்
கருத்து ஏற்பதில்லை
மக்களை
வசைபாடும்
அரசியல்...!!

கோரிக்கை
மக்களுக்கு
வேடிக்கை அரசியல்
வாதிகளுக்கு...!!

ஊழல்
நிறைந்த
அரசியல்
உண்மை மறந்த
கட்சிகள்...!!

வாழ்வாதாரம்
சேதாரம்
பயனில்லா
அரசியலினால்...!!

வெற்றிகள்
தோல்விகள்
மக்களுக்கு என்ன
பயன் அரசியலினால்..!

தலைவர்கள்
தலைகனம்
வாக்குகள்
பெற தருணம் வந்தால்
தர்மத்தின்
தலைவனாக
மாறும் அரசியல்
வாதிகள் நடிப்புகளே...!!

தலைவர்கள்
தேர்ந்தெடுப்பு
நல்ல தலைவன்
யார் சினிமாவிலிருந்து....!!

சமூகத்திற்கு
போராடும்
தலைவன்
அடையாளம் காண
மறுக்கும் சமூகம்
தோல்வியை
சந்திக்கும்
உரிமைகள்
இழக்கும்...!!

தமிழன்
தமிழை இழந்து
வருகிறான் ஒற்றுமை
மருத்துவருகிறான்
இதனால் யாருக்கு
லாபம்....!!

யோசியுங்கள்
ஒன்று படுங்கள்
தமிழனாக வாழ்ந்திட...!

எழுதியவர் : (8-Jul-17, 3:02 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 91

மேலே