வாழ்க்கை போர்க்களத்தில்

அழிப்பது யாருக்கும் எளிய,அரிதாம்
அழித்ததை அழித்தவண்ணம் அழகு குலையாமல் மீட்டெடுப்பது..

தாய் பாடிய தாலாட்டு கேட்டு வளர்ந்த வாய்ப்பு இக்கால குழந்தைக்கும் கிட்டுமோ?

தொழிற்நுட்பம் கற்று ஆக்கத்தை விளைவிக்க வேண்டிய நாம், அழிவிற்காகப் பயன்படுத்துவது ஏனோ??.

புரியாத உலக நியதி..
புரிந்தாலும் யாவும் மறதி..
சுயநலமே இங்கு தலைப்புச் செய்தி...

தன்னில் ஆதிக்கம் செலுத்த இயலாதவன்,
தனக்கு தானே நீதிபதியாய் வீற்றிருந்து தீர்ப்பு எழுதி தன்னை தண்டிக்கவும், தீர்மானிக்கவும் இயலாதவன்,
பணத்திற்கு அடிமையானவன்,
இப்படி பல சூழல்களுக்குள் வாழ்பவன் என்று நீதிபதியாகான்...
அவன் நடத்தும் மன்றமும் நீதிமன்றமாகாது...

தொழிலாளர்களை ஒற்றுமையாக்கி அவர்களின் வாழ்வை முன்னேற்றப் பாடுபடவேண்டியத் தொழிற்சங்கங்கள்,
அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாக போராட்டம், வேலைநிறுத்தம் என்று தொழிலாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்து, வாங்கிய கடனை அடைக்க முடியாதவனாய், வயிறார உணவுண்ண முடியாதவனாய் தொழிலாளரை நசுக்கின்றன நடைமுறை தமிழ்நாட்டில்...

வாழ்வாதாரத்திற்காக போராடவில்லை...
ஆடம்பரத்திற்காகவே போராடுகிறார்கள் கட்டுக்கட்டாக பணத்தை வாங்கிக் கொண்டு....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Jul-17, 5:01 pm)
பார்வை : 878

மேலே