மேடை
பூக்கள்
பேசுவதில்லை
ஆனாலும்
தன் வண்ணம்
வாசம் மற்றும்
மென்மையை கலந்து
மேடையை
அலங்கரிக்கிறது
மேடைகளையும்
ஆடைகளையும்
மாற்றி மாற்றி
அலங்காரமாக
பூ மாலை
சூட்டிக்கொண்டு
பேசத்தெரிந்த
மனிதனின்
வார்த்தையில்
பூவை போல்
வாசமில்லை...