விடை அறியா மனிதன்

தேடுதல்
தொடர்கிறது
மனிதா நீ யார்...!!

போகும்
தூரம்
தெரிவதில்லை
முடிவிலே மரணம்
எதனாலே தெரியுமா...!!

உன்னால்
முடியாதது
உலகில் உண்டா நீ
அறியாமல்
இருந்தால்
யார் பொறுப்பு....!!

எல்லாம்
தெரிந்த நீ
தேடுகிறாய்
எதுவுமே தெரியாமல்....!!

நீ அறியாமல்
இருப்பதால்
தொடருகிறது உனது
பயணம் முடிவில்லாமல் ...!!

(அ) (றி) (வு)
மகத்தான
தெளிவு அறியா
மனிதன்
தொடருகிறான் பயணம்....!!

தத்துவம்
நிறைந்த
உலகம்
உனது அருகிலே - நீ
ஊனக்கண்ணாக
இருக்கிறாயே...!!

உண்மை
அறிய உன் உள்ளம்
தெளிவடையவில்லை
நீ உலகத்தில்
சிக்கிவிட்டாயடா...!!

புரிந்து நட
தெளிவாக சிந்தனை
செய் உனது அறிவு மிக
அற்புதமானது....!!

எழுதியவர் : (9-Jul-17, 2:01 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 145

மேலே