நிலவை நோக்கி எரிந்த கல்
.
[] நிலவை நோக்கி எரிந்த கல் ...
----------------------------------------------------------------------
நிலம் நோக்கி திரும்பாமல்
நிலவு சென்று சேர்ந்தது
அங்கேயும் கூட மிதக்கவில்லை
நிலவை துளைத்து
புதைந்து கொண்டது
காரணம் -
கல் எரியபட்ட வேகம் அல்ல !
நிஜம் என்னவென்றால்
நிலவே அதை
ஏற்று ஈர்த்துக்கொண்டது !!
அதே கல் அதே வேகத்தில்
ஒரு மலையின் உச்சி நோக்கி
எரியபட்டிருக்குமாயின்
குன்றின் உயரம் கூட
கண்டிருக்காது அக்'கல்' ..!
இப்படி யாரிடமும் எடுபடாத
என் கோபத்தை கூட மதித்து
எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது
நிலவே உன்னால் மட்டும் ..!!
- யாழ் ..
.

