தீண்டாமை

நிமிடம் நிமிடம் பிறக்கிறோம்,

நிமிடம் நிமிடம் இறக்கிறோம்.

நட்பு பகைமை வளர்க்கிறோம்,

இன்பம் துன்பம் அடைகிறோம்.

கோபம் கொள்கிறோம்,

சில நேரம் கோபத்தாலே கொல்கிறோம்

இவையாவும் இயல்பு.

ஆனால் தீண்டாமை மட்டும் மரபா?

கைகளில் குறையா, இல்லை கால்களில் குறையா..!!

பேச்சில் பிழையா , விடும் மூச்சில் தான் பிழையா.!!

அவனும் பிறக்கிறான், அன்னை மடியில் வளர்கிறான்

வேறென்ன செய்துவிட்டான் வெளியேற்ற..??

ஜாதிகள் வேண்டாமடா, இல்லை நம் நாடு

நாஸ்தியாய் போகுமடா.

அரிசியாய் விளைகிறான், செருப்பாகவும் தேய்கிறான்,

வேறன்ன பாவம் செய்தானவன், ஒதுக்கி வைக்க..??

யோசனை கொஞ்சம் வேண்டும்

அன்று தான்,

இவ்வேதனை முற்றும் தீரும்



தீனதயாளன்

எழுதியவர் : (11-Jul-17, 5:04 pm)
Tanglish : THEENDAMAI
பார்வை : 74

மேலே