மகளதிகாரம்
பிறை நிலவே,
இளம் தளிரே.!
எனக்கொரு பிறப்பளித்து
எனக்காகப் பிறந்தவளே!
மடி மீது விளையாடும்
என் மான் குட்டியே.
என்னவளை அன்னையாக்கி
எனக்கு அன்னையானவளே..
என்றும் என்னிலும்
என் நெஞ்சிலும் வாழும் என் தேவதையே...
தீனதயாளன் ஸ்ரீனிவாசன்