கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-01

.....கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்....

காதல் துளிகள் : 01

01.காதலைச் சொல்லிட வார்த்தைகள் போதுமென்று நினைத்தேன்
அவன் கண்களைக் கண்டதும்
கண்டுகொண்டேன்
நான் கொண்டிடும் வெட்கமே
போதுமென்று...

02.ஆயிரம் காரணங்கள் உனைக்
காதலிக்க இருந்தாலும்
உன்னைக் கண்ட நொடியில்
அவை ஒன்றும் என் கண்முன்
வரவில்லை நீ மட்டுமே என்
கண்களுக்குள் நின்றாய்...

03.ஆதவனைக் கண்டதும்
மறைந்திடும் நிலவாக நான்
இருந்திட விரும்பவில்லை
என்னவனைக் கண்டதும்
மலர்ந்திடும் சூரியகாந்தி
மலராகவே இருந்திட
விரும்புகிறேன்...

04.பார்வைகளும் மொழியறிந்தவை
என்று கண்டுகொண்டேன்
நானும் அவன் கண்கள் என்னோடு
புதுக்கவிகள் பேசிய பொழுதுகளில்...

05.கவிதை எழுதிட நினைத்தேன்
வார்த்தைகள் மௌனமானது
அவனை எழுதிட நினைத்தேன்
அதுவே கவிதையானது...

எழுதியவர் : அன்புடன் சகி (11-Jul-17, 6:20 pm)
பார்வை : 723

மேலே