குடிமகன்களுக்கு மட்டும்

அன்னை கருவுற்ற போது நினைத்தாளாம் நான் ஆண்மகன் என்று,
பிறப்பின் போது உறுதியானது பெரும்செலவு உள்ளதென்று,
பூக்கள் பறித்து விளையாடிய தருணம் போய் பூப்பொய்திய காலம் வந்தது.
சிறையெடுக்கப் பட்டேன் சிதைக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில்,
பட்டம் பயில ஆசைதான் ஆனால் பள்ளி தாண்ட இயலவில்லை,
திருமணத் தேதி குறித்தனர் தீர்க்கமான முடிவுடன்,
வழியின்றி வளைந்து கொடுத்தேன் உற்றார் சொன்ன காரணத்தால்,
கனவுகளுடன் கரம் கோர்த்தேன் கண்ணிமைக்கும் நேரத்தில்,
வாழ்க்கை பட்ட ஆறே மாதத்தில் வாரிசுக்கு வழி வந்தது,
குடியுடன் அல்லவா குடித்தனம் நடத்தினான்,
குழந்தையின் பசி எவ்வாறு புரியும்,
மதியிழந்து விதி முடிந்து சென்று விட்டான்,
வீதியில் நிற்கிறேன் விதவை எனும் பட்டத்தோடு.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (11-Jul-17, 8:48 pm)
பார்வை : 79

மேலே