தூக்கத்தை கடன் கொடு
இரவுகளின் நீளம் முழுக்க
விழித்தே கிடக்கிறோம்
நானும்
என் கை பேசியும்
ஆயிரம் குறுஞ்செய்தியை
அடுக்கடுக்காய்
குவித்தபடி
அனுப்பினால் மட்டுமே
மூடுவதென்ற
தீர்க்க முடிவுடன்
என் இமைகள்
அன்பே கொஞ்சம்
தூக்கத்தை கடனாய் கொடு
கூடவே உன்
தொலைபேசி எண்ணையும் . . . . . . .