போன உயிர் வந்துவிட்டால்

போன உயிர் வந்துவிட்டால்
============================
போன உயிர் வந்துவிட்டால்.
பூவுக்குள் அடைத்த உயிரும்
மீண்டும் உன்னால் பூப்படையும்...!!!

தூக்கத்தில் அலையும் நிலவும்
ஏக்கத்தில் ஜன்னல் கதவை தட்டும்...!!!

விட்டு விட்டு துடிக்கும் என் இதயம்
விட்டுவிடாமல் உன் பெயரை
மொழிபெயர்த்து அளிக்கும்...!!!

உன் சுவாச அறையில்
என் மூச்சு பங்கு கொள்ளும்...!!!
உன் விழியறையில்
என் பார்வை பட்டுச்செல்லும்...!!!

வெட்டப்பட்ட கத்தி நுனியில்
காதல் கதகளி ஆடும்...!!!
வண்ணம் தீட்டிய சுவற்றில்
வார்த்தைஜாலம் பிறக்கும்...!!!

கண்ணை பார்த்தால்
கண்டபடி நெஞ்சில் அன்பு கொட்டும்...!!!
இமை மூடினால் - எதிர்பாராமல்
முத்தம் கன்னத்தில் அறையும்...!!!

முகத்தில் பட்டாம்பூச்சி அமர்ந்து
அகத்தில் சிறகடித்து தேடும்
என் விழிக்கு உன் நிழலையும்
நிழலுக்குள் உயிரையும் கண்டால்
உயிரான காதல் திரும்பும் உணர்வால்...!!!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (13-Jul-17, 1:29 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 313

மேலே