காதலுக்கு அகவையில்லை
காதலுக்கு அகவையில்லை காலமதைச் சொல்லிடுமே
மரணங்கள் பொய்த்துவிடும் மாசற்ற நேசத்தால் .
முதுமையிலும் அழகாகும் முத்தான அரவணைப்பு .
மனையாளின் அகம்நோக்கும் மங்காத நற்காதல் .
கவிதையிலே வனைகின்றேன் காரிகையின் உருவத்தை .
செவிகளிலே ராகங்கள் சென்றிடுமே தூதாகி .
புவிதனிலே இறக்காது புத்துலகும் படைத்துவிடும் .
மறுபிறவி எடுத்திடுமே மலருக்கும் ஒப்பாகும் .
வயதாகிப் போனாலும் வாலிபமே உள்ளத்திலே !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்