எங்குதான் சென்றாயோ ஏங்குகிறேன் நான்

கோடை வெயிலில் உடல் வருடும் காலைத் தென்றல்
ஓடை நீரில் நீந்தி மகிழும் பல்வகை மீன்கள்
வசீகரம் பொங்கும் வண்ண வானவில் மலர்கள்
ஓடிப் பிடித்து ஒளிந்து விளையாடும் அன்னப் பறவைகள்
மரக்கிளையில் கரவாய்க் கொஞ்சும் காதல் கிளிகள்
உதய கீதம் பாடும் குயில்கள் தாளம் தப்பாது ஆடும் மயில்கள்
நீ என்னருகில் இல்லாத போது
இத்தனை அழகும் அருகே கொட்டிக் கிடந்தும்
என் மனம் எதனையும் ரசிக்க மறுக்கிறதே
நீ எங்கு தான் சென்றாய்
மலர்களில் நடுவே தொலைத்த உன் முகம் தேடுகிறேன்
காற்றில் கலந்து கிறங்கடிக்கும் மல்லிகை வாசம்
உன் அருகாமையை எண்ணி ஏங்கும் எனது தேகம்
நான் அருகே இருப்பதையும் மறந்து
காதலியை கொஞ்சும் காமத் கிளியே
என்நிலை என்னவென்று உனக்குத் தெரியுமா ?
என்னை அதிகம் கிளறாதே
உன்னைக் கொன்றுவிடுவது போல்
எனக்கு கோபம் வருகிறது
ஏன் இத்தனை தாமதம் ? நிலை கொள்ளாமல்
நான் இங்கு தவிக்கிறேனே சென்று காத்திருங்கள்
உடன் வந்து விடுகிறேன் எனச் சொன்னாயே

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (13-Jul-17, 1:51 pm)
பார்வை : 158

மேலே