மழையோடு மழையாய் கரைந்து போன கண்ணீர்

ஒரு நாளின் மழை நேரத்தில்
நம் கடைசி சந்திப்பு !

நாளை முதல் நீ வேறு ஒருவரின் உடையவள்
ஆகிறாய் !
நாளை முதல் நான் வெவ்வேறாய்
உடைந்தவன் ஆகிறேன் !

கண்ணீர் வற்றும் வரை அழுது அழுது
தீர்த்து முடித்தாய் ! நீ
உனக்காய் நான் அழவில்லை என்ற கோவமும்
சேர்த்து !

மழை நின்று முடிக்கும் வரை
வீடு வந்து சேரும் வரை
மொத்தமான கண்ணீர் துளிகளும்
மழையோடு மழையாய் கரைந்து போனதை
நீ இன்று வரை அறிந்து இருக்க வாய்ப்பில்லை !

எழுதியவர் : முபா (13-Jul-17, 4:36 pm)
பார்வை : 215

மேலே