வாழ்விலக்கணம் --

துணையின்றி, ஆதவன் மறைவினும் -அவன் நினைவெனும் ஒளியின்றி நிலாவும் உலாவிடுமோ!
உலாவினும் நிலாவாகுமோ!

கனவின்றி கண்களும்
கற்பனையின்றி கவிகளும்
அவனின்றி நானும்
எண்ணியதில்லை ஒருநாளும்

பூமனம் புரிந்துகொண்டால்
காய்மனம் ஆவதுண்டோ!
காய்மனம் காத்திருந்தால்
கனிமனம் காண்பதுண்டு
கனிமனம் காண்பதெல்லாம் அன்பிலோர் ஆலயம் ஒன்றே!


வாழ்வில் சேரினும்,
சேராஆ மனம்,
சேர்த்தது என்னவோ
சிற்றெண்ண குணம்,
ஈரினமும் ஓர்மனமாயின் வாழ்வில்,
ஒருபிரிவும் சேராஆ! சேரின் காதல் கல்லறையிலும் சேர்ந்திடுமோ!

ஈரினமும், காண்பது வெறும் காமமேஏ! எனில் -தேனிலவு போயினும் வாழ்க்கையென்பது ஓரிர வாகிடும்,
ஆகாஆ! விடில் அஃறிணையில் சேர்ந்திடும், சேராஆ! விடில் உயர்திணை வாழ்க்கையோ வெறும் பெயர்தனில் வாழ்ந்திடும்!

உடலுள்ளம் இரண்டிலும்,
இன்பம் காணாதொரு இல்லறம்
கற்சிலைக்கு சங்கீதம் கற்பிப்பது போலாகும்...

-கல்லரைச்செல்வன்

எழுதியவர் : கல்லரைச்செல்வன் (13-Jul-17, 10:29 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 530

மேலே