காதல் வலி - 59

இவள்
அழகுத் தொழிற்சாலையின்
அற்புத இயந்திரம்
கனவுத் தொழிற்சாலையின்
பொற்பதத் தந்திரம்

இவள் அறிவாள்
தொழில் சாலையைக்கூட
எழில்சாலையாய் மாற்றும் மந்திரம்
இவளை 1947 ல்
வெள்ளையன் கண்டிருந்தால்
நமக்கேது சுதந்திரம்

இரவில் விளக்கு
தேவையில்லை
விளக்கமாய் இவள் இருக்க
உறவில் விலக்கு
தேவையில்லை
விலக்கனால் நான் இறக்க

இவளைக் கண்கொண்டு
வியக்காத குருவியும் இல்லை
இவளைக் கண்டபின்பு
கொதிக்காத குருதியுமில்லை

இவள் அழகை அளக்க
கருவியும் இல்லை
இவள் கூந்தல் வாசம்
இயற்கைஎனச் சொல்ல
நான் தருமியும் இல்லை

இவள் குழந்தைகள்
விரும்பும் பஞ்சுமிட்டாய்
இவளால் உடைந்துபோனது
என் நெஞ்சு திட்டாய்

இவள் மேனகையின் மேல்நகை
புன்னகை செய்யும் பொன்நகை

இவள் கன்னித் தீவில் பிறந்த கன்னி
இவளை வடிவமைக்க பிரம்மன்
பயன்படுத்தியதோ ஆயிரம் கணினி

எழுதியவர் : புதுவை குமார் (14-Jul-17, 12:23 am)
பார்வை : 688

மேலே