தெய்வம் தந்த கூடு
கரந்தோய்ந்த
பசுக்களை நுகத்தடிக்குள்
பூட்டாதீர்கள்
நுகத்தடியால் தோள்பட்டை
தேய்ந்த காளைகளை
அடித்து ஓட்டாதீர்கள்
உழைத்து உருகுளைந்துப்போன
ஜீவன்களிடம் காருண்யம்
காட்டுங்கள்...
அப்பா அம்மா என்ற
இரு ஜீவன்களும்
குடும்பம் எனும்
நுகத்தடியில் சிக்கி
உருகுலைந்துப்போன
ஒரு உன்னத பிறவிகள்...
அந்த ஜீவன்கள்
பாரம் சுமந்து சுமந்து
இளைப்பாற நிழல்
தேடி வரும்போது
பிள்ளை மரங்களே
அந்த ஜீவன்களுக்கு
நிழலும் கனியும்
கொடுத்து இளைப்பாற
செய்யுங்கள்..
நீங்கள் நிழலில்
வாழ அவர்கள்
வெய்யிலில்
காய்ந்தார்கள்
நீங்கள் புசிப்பதை
பார்த்து அவர்கள்
பசியாறினார்கள்
உங்கள் எதிர்காலத்தை
அவர்கள் கனவு கண்டார்கள்...
அந்த ஜீவன்களின்
பாதங்களுக்கு செருப்பாய்
இல்லாவிட்டாலும்
வெறுப்பாய் நெருப்பள்ளி
வீசாதீர்கள்...
மண்ணைவிட்டு
போனபிறகு
படத்துக்கு பூஜை போட்டு
புண்ணியமென்ன
இருக்கும்போதே
இன்பவாழ்வை கொடுத்து
மகிழச்செய்யுங்கள்
வாழ்வது ஒருமுறை
அதை முழுமையாக
வாழ்ந்துப்பார்ப்போம்...