உன் நினைவில் நெகிழும் நெஞ்சம்
என்னோடு பேசாமல்
எது முழுதாய் புரியும்
உள்ளத்தின் துடிப்பென்ன
உனக்கெப்படித் தெரியும்
என்கண்ணை நோக்காமல்
உணர்வெப்படி வடியும்
என்மார்பில் சாயாமல்
இரவெப்படி விடியும்
எனையெண்ணிப் பார்க்காமல்
உயிரெப்படி மலரும்
என்னைத்திட்டித் தீர்க்காமல்
சுமையெப்படி விலகும்
நிழல்விழுந்த தரைமீது
தடமெப்படி தெரியும்
என்னிதய எடைதாங்கி
உன்மனமா முறியும் ?
#மதிபாலன்