நிலவிலும் நீயடா

நினைவு மட்டுமல்ல ,
நிலவிலும் நீயடா !

கதிர்விசும் உம் கண்களில்
குளிர் வீசும் நிலவை கண்டேன் !
காற்றுரசிய அவர் கைகளினால்
கார்மேகம் உரசிய நிலவை கண்டேன் !
கலங்கும் என் கண்கண்டு கலங்கிய அவரில் ,
கலக்கம் கொண்டுள்ள நிலவை கண்டேன் - அவர்
கள்ளமில்லா அன்பிலும் அரவணைப்பிலும்
கண்டதும் களிப்பாக்கும் நிலவைக்கண்டேன் - இன்றும்
காண்கிறேன் நிலவினில் முழுதாய்
கனவினில் மட்டுமே கண்ட அவரை !

நிலவும் நீயும் ஒன்றடி என்றார் !
நின்றாடி மயக்குகிறார் நிலவாகவே தோன்றி தினமும் !
நினைவுகள் கொல்ல ,
நிலவை சந்திக்க செல்வேன் ,
நிலவும் கொல்கிறது
நிதமும் தவிக்கிறாயா அவரைக்காண
நில்லடி பெண்ணே
நிழல்முகம் காண்பிக்கிறேன்
நிம்மதியாய் கண்டு ரசித்திடு என்று !

எழுதியவர் : ச.அருள் (14-Jul-17, 8:35 pm)
Tanglish : nilavilum neeyadaa
பார்வை : 507

மேலே