சிறியா - சிறேயா - பெரியா - பேரேயாவா

சிறியா - சிறேயா - பெரியா -  பேரேயாவா

ஏண்டி கோதை, உன்னோட அத்தைக்கு ரட்டைக் கொழந்தை பொறந்திருக்குதாமே?
😊😊😊😊😊😊😊
ஆமாம் பாட்டிம்மா. ரண்டும் பெண் கொழந்தைங்க.
😊😊😊😊
எல்லாம் நல்ல இருக்கறாங்களா?
😊😊😊😊😊😊
எல்லாம் நல்லாருக்காங்க பாட்டிம்மா. நேத்துத்தான் பெயர் சூட்டு விழா. நீங்கதான் பாட்டிம்மா வரல.
😊😊😊😊😊
நா என்னடி பண்ணட்டும் கோதை. வயசு எம்பத்தஞ்சு ஆகுது. மூட்டுவலி வேற. நா என்ன செய்யறது? சரி கொழந்தைகங்களுக்கு என்ன பேரு வச்சாங்க?
😊😊😊😊
ஒரு கொழந்தை பேரு ஷ்ரியா. இன்னொரு கொழந்தை பேரு ஷ்ரேயா, பாட்டிம்மா.
😊😊😊😊
என்னடி 'சிறியா', 'சிறேயா' -ன்னு பேரு வச்சிருக்காங்க. ஒரு வேளை நாலு கொழந்தைங்க பொறந்திருந்தா மத்த ரண்டு கொழந்தைகங்களுக்கும் 'பெரியா', 'பெரேயா' - ன்னு பேரு வச்சிருப்பாங்களோ?
😊😊😊
பாட்டிம்மா, ஷ்ரியா, ஷ்ரேயா-ங்கற பேருங்கெல்லாம் சினிமா நடிகைங்க பேருங்க பாட்டிம்மா. உங்களுக்குத்தான் அந்தப் பேருங்கள சரியா உச்சரிக்கத் தெரில.
😊😊😊😊
தமிழர்கள்ல படிச்சவங்க படிக்காதவங்க எல்லாம் சினிமா ரசனை அதிகம் உள்ளவங்களா இருக்கறாங்கடி கோதை. நம்ம தமிழ்ல அழகான பேருக்கு பஞ்சம் ஏற்பட்டமாதிரி வேற மொழிப் பேருங்கள வைக்கறாங்க. உம்...காலம் அப்பிடி இருக்குது. சரி அந்த சிறியா, சிறேயா -ங்கற பேருங்களுக்கு என்னடி அர்த்தம்.
😊😊😊😊
பாட்டிம்மா, அந்தப் பேருங்கள கொழந்தைங்களுக்கு வச்ச என்னோட அத்தை, மாமாவுக்கே அந்தப் பேருங்களுக்கு என்ன அர்த்தம்னு தெரியாது.
😊😊😊😊
நல்லாப் பேரு வைக்கறாங்கடி. சிறியாவாம், சிறேயாவாம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Shriya=(Prosperity)
Shreya=(beautiful,better,to give credit to someone, auspicious)


Close (X)

5 (5)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே