பெண் இனமே

பெண்ணாக உலகில்
பிறக்கும்போது அழுதுக்கொண்டு
பிறந்தேன்!
என்னை ஈன்றவளும் அப்போதுதான்
அழத்தொடங்கினாள்!!
என்னை நினைத்து அன்று
அழத்தொடங்கியள் இன்று வரையும்
அழுகிறாள்
ஏழையாக பிறந்து விட்டோம் என்று!
எத்தனை ஆடவர்கள்
இதனை அறிவீர்கள்?!,

வரதட்ச்சனை என்ற
ஒரு வார்த்தை எங்கள் வாழ்க்கையை
மாற்றி அமைக்கின்றது!
இதனை எத்தனைபேர் அறிவீர்கள்?,

திறக்கப்படும் ஒவ்வொரு
மதுக்கடையாலும்
என்போல் எத்தனை மாதுக்கள்
வாழ்க்கையை துறக்கின்றோம்
என்று அறிவீர்களா?,

பருவ மாற்றத்தினை
பார்த்தபோதும்
குடும்பங்களுக்கு பயந்து வாழும்
என்போல் பெண்களை
நீ கண்டது உண்டா?,

கல்யாணம் என்ற
ஒரு காரணத்திற்க்காக
கல்லூரி கனவை துறக்கும்
என் சகோதரர்கள் போல
யாரையாவது நீ கண்டது உண்டா?,

கணவன் என்ற ஒருவன்
கண்மூடித் தனமாக நடக்கும்
சில நேரங்களில்
கண்ணீரில் தவிக்கும்
எங்களின் நிலையை
நீ அறிந்தது உண்டா?,

தாராமாக ஒருவன்
வீட்டிற்க்கு சென்ற பிறகும்
தாய் வீட்டிற்க்கு பாரமாக இருக்கும்
எங்களை போன்ற பெண்களை
என்றேனும் நீ கண்டது உண்டா?,

ஆண் ஆதிகத்திற்க்கு
பயந்து
அன்பை இழந்து
ஆறுதல் இன்றி
தவிக்கும் எங்களை போல
சகோதரிகள் உனக்கு உண்டா?,


புகுந்த வீட்டில்
புரியாமல் செய்யும் தவறுகளை கண்டு
இரவுகளில் உறங்க முடியாமல்
பகலில் படுக்க முடியாமல்
பார்த்தே தவிக்கும்
கொடுமைகளைப் போன்று
நீ பார்த்து உண்டா?,

இறக்க நினைத்தால்
நான் ஈன்ற மழலை சேய்கள்
என் மனதை கட்டிப்போடுகின்றன!
இருக்க நினைத்தால்
இங்கிருக்கும் சோகங்கள் தீருவதில்லை
இதுப்போன்று நிலையை
நீ அணுபவித்து உண்டா?,

கண்ணீர் என்ற ஒன்றை
வெளிகாட்ட முடியாமல்
வெம்பி வெம்பி
வாழ்வை வெறுத்து
அழுதுக்கொண்டு இருக்கும்
எங்களை போல
அக்கா தங்கைகள்
உனக்கு உண்டா?
இல்லை
இதுபோல என்றேனும்
உணர்ந்தது உண்டா?,

கழுத்தில் தாலிகட்டியவன்
தாய்வீடு சென்று வா
என்று சொல்லும்போது
சாகடுக்கப்படும்
என் குடும்பங்களை போல
நீ கண்டது உண்டா?,

கணவன் சொல்லும் வார்த்தைக்கும்
அவன் விட்டுச் செல்லும்
வாழ்க்கைக்கும்
பயந்து பயந்து
பாழாய் போகும்
எங்களைப்போன்றவர்களை
நீ பார்த்தது உண்டா?,

ஆணாக பிறந்த பின்பும்
அவமாணம் படும்
என் அண்ணன் தம்பியை போல
ஒரு உடன் பிறப்பாக
நீ இருந்தது உண்டா?,

கட்டியவனை பிரிந்து வாழும்
காலங்களில் கண்ணெதிரே
இந்த காலம் பேசும் வார்த்தைகளை
நீ கவணித்தது உண்டா?,

இந்த உலகில் வாழ
ஏழையாக பிறந்தது
எங்கள் தவறா?
இல்லை
இந்த சமுகத்தில் வாழ்வதே
எங்கள் தவறா?,

பெண்கள் என்றாலே
இழிவாக பேசும்
இந்த சமுகத்தில்
இதுபோல் உள்ள
எங்கள் வாழ்க்கையை
யாரேனும் அறிந்தது உண்டா?,

பெண்ணாக பிறந்தவள் எல்லாம்
பிணமாக வாழத்தொடங்கினால்
வாழும் இடம் எங்களுக்கு
சுடுகாடாக மாறிவிடும்!
பிறகு எதனுடன்
நீ வாழ்வாய் மானிடா?,

உன்னை ஈன்றவளை
பெண்ணென்றும்,
உடன் பிறந்தவளை
பெண்ணென்றும்
பார்க்கும் உன்போல் சில ஆண்களே
வாழ்க்கைக்கு துனையாக
வந்தவளையும் பெண் என்று
அறிந்து நடப்பாயா?
இல்லை
பெண் இனமே
அழிய நினைப்பாயா???????????????
????????????????????????????????

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (16-Jul-17, 8:08 pm)
Tanglish : pen iname
பார்வை : 149

மேலே