அதர்ம உலகம்
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் ஒரு விடயமே விளங்குகிறது பூதாகரமாக...
தனிமனிதனை அனைத்து நாடுகளும் ஒன்று கூடி அழித்துள்ளன பலமுறை...
எவன் பலவானாக விளங்கினானோ அவன் மரணமெல்லாம் நிகழ்ந்துள்ளது மர்மமான முறையில்...
தெளிவான தகவல்கள் ஏதுமில்லை சூழ்ச்சிகள் பல கோடிமுறை நடந்திருப்பதாலே...
ஒரு பக்கம் நல்லவர், வல்லவர் என்று கூறப்படுபவர் மறுபக்கம் கொடியவர், தீவிரவாதி என்றெல்லாம் கூறப்படுகிறது வரலாற்றில் ஆயிரக்கணக்கில்...
தன்னைவிட பலவானாக, புத்திமானாக இருந்தால் அவனை அழித்து மண்ணில் புதைத்தே திருப்தியடைந்துள்ளது இந்த உலகம்...
எண்ணற்ற தலைவர்கள் மர்மமான முறையில் சாகடிக்கப்பட்டு இருப்பதன் காரணமென்ன?
ஒருபக்கம் இனவெறி என்கிறார்கள்..
மறுபக்கம் நிறவெறி என்கிறார்கள்...
வெறிக்கு அடிமையானதால் அழிக்கப்பட்டார்களா?
பொறாமை கொண்டு துரோகத்தால் அழிக்கப்பட்டார்களா?
வினாக்கள் பலவுண்டு...
சரியான விடைகள் கிடைக்கவில்லை திரிக்கப்பட்ட வரலாறுகளால்...
கோழைகளே துப்பாக்கியை ஏந்திக் கொண்டு தூரத்திலிருந்து அழிக்க முற்படுவார்கள்...
இச்செயல் உலக சாதனையாக ஏற்கப்படுகிறதென்றால் இதைவிட வேறு அதர்மமேதும் உண்டா???