துளிகள் வலிகள்

பள்ளிக்கு போகும்
பிள்ளைகள்
உள்ளத்தில் ஏக்கம்
நிந்தித்தாள் தெய்வத்தை
மலடி...
************************
அவளின்
திருமணப்பத்திரிகை
ஆயிரம் முறை படித்தாள்
முதிர்கன்னி...
************************
உலை கொதிக்கிறது
அரிசிக்கு காத்திருக்கிறாள்
வறுமை...
************************
வேலை தெரியாதவன் மேலாளர்
அனைத்தும் தெரிந்தவன்
அவனுக்கு கீழே
சிபாரிசு...
************************
முல்லைக்கொடி
தரையில்
தேருமில்லை பாரியுமில்லை
அனாதை பிள்ளை...
************************

எழுதியவர் : செல்வமுத்து.M (16-Jul-17, 11:42 pm)
Tanglish : thulikal valikal
பார்வை : 216

மேலே