முகநூல் தங்கை

ஏழை அண்ணன் உணர்வு
***************************
முகம் பார்த்து வரவேண்டிய சந்தோசங்களை
முக நூலில் தேடிக்கொண்டிருக்கிறாள்
தன் சந்தோச முகவரியைத் தொலைத்து முகம்
அறியாத என்னிடம்~அவள்
உறக்கம் தொலைத்து என் முகநூல் உள்
பெட்டியில் அழுதுகொண்டிருக்கிறாள் நாடு கடந்து வந்தப் புறா!

தொப்புல் கொடியில் முடிப்போட்டு உதிரமும்
பாசமும் ஊட்டி வளர்த அன்னையும்
தந்தையெனும் "அன்பின்" தோழனும் கல்லறையில் உறங்க ரத்த உறவுகள் இருந்தும்
அவள் அனாதை ஆனாளாம்!

கண்கள் கண்ணீர் குடம் எடுத்து ஊற்றுகிறதாம்
அவள் நினைவுகள் தன் தந்தை அன்னையின் சமாதியில்!

அவளை அதட்டுகின்ற அண்ணன்கள் அருகில் தேடுகின்றாளாம் தாயின் பாசமும் தந்தையின் நேசக் கரமும்!

பூவைப் போல் தாலாட்டிய அன்னை தந்தை இன்றி அண்ணன் அண்ணிகளின் கையில்
சாவி பொம்மையாம்!

பெற்றவர்களே அடிக்கக் கூடாது எனச் சட்டம் இருந்தப் போதும்! உறவு எனும் நெகிழ்ப் பையில் அடைத்து வாழ்க்கையே சுவாசம்யின்றித் தவிக்கிறதாம் கன்னத்தில் அரையப் பட்டு அவள் கன்னங்கள்
சிவந்துக் கொடுமையின் உச்சம்! கோரத் தாண்டவமாம்!

"நீக் கூறும்" போதெல்லாம்
உள்பெட்டி மட்டும் அழவில்லையம்மா இந்த அண்ணனின் இதயப் பெட்டியும் தான் அழுகின்றது அம்மா!

ஏழை அண்ணன் நான் என்னச் செய்வேன் ?நாடுக் கடந்து உணக்கு காற்றில் ஆறுதலைத் தான் கூற முடியும் அம்மா!

பணம் எனும் மருந்து இல்லாமல் கைக் கால்கள் இருந்தும் முடம் ஆக்கப்படவன் அம்மா இந்தப் பாவி! நாடுக் கடந்து வந்து உன்னைப் பார்க்க முடியாத! என் உணர்வுகளும் முடமாக்கப்பட்டு விட்டதம்மா!
அன்புடன் அண்ணன்
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (17-Jul-17, 2:33 am)
பார்வை : 194

மேலே