சொர்க்கமே என்றாலும் -- கிராமியக் கவிதை
சொர்க்கமே என்றாலும் -- கிராமியக் கவிதைப் போட்டி
சொர்க்கமே என்றாலும்
நம்ம ஊரு போல வருமா !
இடி இடிக்குது ; மின்னல் மின்னுது
மேகமெல்லாம் உருண்டோடுது .
மயில் ஆடுது : குயில் பாடுது !
மேக கருக்குது : மழை பொழியுது !
ஆத்தோரம் போனாலே
ஆடியோடி விளையாட
காத்தும் அடிக்குது ! கனமழை வருகுது !
கூத்தும் கும்மாளமும் போடுவோம் !
சாத்தி வைக்க சன்னலுமில்ல !
ஏத்தி உக்கார ஏணியுமில்ல !
மண்குடிசை வீட்டுக்குள்ள
விளையாட இடமில்ல .
மழை வந்தா வெட்டவெளி
பொட்டலிலே விளையாடுவோம்
எல்லோரும் ஒன்னு சேர்ந்து .
குடிசைக்குள்ள தண்ணி போனா
குடும்பத்துல வேதன தான் .!
பாத்திரத்த அங்குமிங்கும்
மாத்தி மாத்தி வெச்சு
தரையில தண்ணி வராம
பாத்துக்குவா என் தாயி !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்