கருப்பு தேவதை

தினமும் அலுவலகம் செல்லும் பேருந்து நிலையத்தில் ஒரு பிச்சைக்கார பெண்மணி நின்று கொண்டு பிச்சை எடுத்து கொண்டிருப்பார் .
நான் தினமும் 5 ரூபாய் போடுவது வழக்கம் . அதனால் அவர் என்னை பார்த்ததும் நான் நிற்கும் இடத்திற்கு விரைந்து வந்து வாங்குவார் . கொஞ்சம் வயதான பெண்மணி .
சிலநேரம் யோசித்தது உண்டு தினமும் 5 ரூபாய் , ஒரு மாதத்திற்கு 155 ரூபாய் அப்போ ஒரு வருடத்திற்கு ?? என்றெல்லாம் ..
ஆனாலும் அவர் முன் வந்து நிற்கும் போது இல்லை என்று சொல்ல தோணாது . சிலநேரம் சில்லறை இல்லாமல் 10 ரூபாய் கூட கொடுப்பேன் .
அன்று விடுமுறை நாள் என்பதால் அம்மாவை பார்க்க என் ஒரே மகளுடன் கிளம்பினேன் . பேருந்து நிலையம் அடைந்ததும் அந்த பிச்சைக்கார பெண்மணி ஓடி வந்தார் . இன்னைக்கும் கொடுக்கணுமா? பெரும் தொல்லையாய் போச்சே இவங்களாலே என்று மனதிற்குள் குமுறினேன் .
என் குழந்தை நான் குடுக்கிறேன்மா என்று காசை புடுங்கி கொடுத்தாள். பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வருவதும் போவதுமாக இருந்தது .
நான் ஏற வேண்டிய பேருந்து நான் நிற்கும் இடத்திலுருந்து சற்று தொலைவில் வந்து நின்றது .பேருந்தில் ஏற ஓடினேன் . என் குழந்தை கையை விடுத்து ஓடினாள் . எதிர்புறம் இன்னொரு பேருந்து வந்தது . பாப்பா ...!!! என்று கண்ணை மூடி அழைத்து தான் என் நியாபகம்.
கண் திறந்து பார்த்தால் பேருந்து நிலையத்தில் இருக்கையில் படுத்து கொண்டுருந்தேன் . என்னை சுற்றி பயணிகள் நின்று கொண்டிருந்தனர் . என் குழந்தை பக்கத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள் . அவளை கட்டி அணைத்தேன் . என்னை தெரியாமல் கண்ணீர் கொட்டியது .
அப்போது அங்கு நின்ற ஒரு பெண்மணி கூறினாள், அந்த பிச்சைக்காரிதாம்மா உன் குழந்தையை காப்பாற்றினார். அவங்க புடிக்கலன்னா என்னாகும்னு நினைத்து கூட பார்க்க முடியல .
இதை கேட்டதும் என் கண்கள் அந்த பிச்சைக்கார அம்மாவை தேடின . சற்று தொலைவில் நடந்து போய் கொண்டுருந்தார் . அப்போது அவர் என் கண்ணுக்கு குழந்தையை காப்பாற்ற வந்த கருப்பு தேவதையாய் தோன்றினார் . அனால் அந்த நிகழ்ச்சிக்கு பின் நான் அந்த தேவதையை பார்க்கவே இல்லை. ஒரு நன்றி கூட எதிர்பார்க்காமல் எங்கேயோ சென்று விட்டார்.


  • எழுதியவர் :
  • நாள் : 16-Jul-17, 11:03 pm
  • சேர்த்தது : Sarah14
  • பார்வை : 513
  • Tanglish : karuppu thevathai
Close (X)

0 (0)
  

மேலே