இயற்கையில் மறைவு

மண்ணில் வந்த பின்
மறைதல் என்பது
அத்தனை படைப்புகளுக்கும்
தலை விதிதான்
அவை உயிரினங்களோ
இல்லை ஜடங்கள்
என்று நாம் சொல்லும்
அத்தனை படைப்புகளும் தான்

படைப்பில் வந்த
மாபெரும் சமுத்திரங்கள்
காணாமல் போனதுண்டு
அந்த டெதிஸ் மாகடல் போல
மாபெரும் நதிகளும்
சுவடு தெரியாமல்
காணாமல் போனது
இன்றைய விஞான கண்டுபிடிப்பு
கங்கை,யமுனை,சரஸ்வதி
என்று தெய்வ நதிகளைக் கூறி அழைப்பர்
நம் முன்னோர் ,அவற்றில்
சரஸ்வதி மறைந்த நதியாகும்
ஆம் நம்மை போலவே
நதிகள்,கடல்கள்,மலைகள்
அத்தனைக்கும் ஆயுள் உண்டு
அவை உயிருள்ள ஜடப்பொருள்கள் தான் !

காலம் காலனாய் மாறி
அவனியில் உதித்த
அத்தனையையும் ஒரு நாள்
அமைதி படுத்துகிறான்
அது இறைவன் காலதேவனுக்கு
வகுத்த நியதி !

இதில் விதிவிலக்கு
என்பது இருந்ததே இல்லை
இறைவனே மண்ணில் வந்து
மனிதனாய் அவதரிக்க
அவனையும் காலம் காலனாய்
வந்து பற்றும்
இப்படித்தான் மறைந்தனர்
மண்ணில் மனிதராய்
அவதரித்த அவதார புருடர்கள்
ராமன்,கிருட்டிணன்
புத்தன், ஏசு என்பார் !

மண்ணில் வந்தடைவதெல்லாம்
மண்ணிலேயே மறையும்


Close (X)

4 (4)
  

மேலே