கள்வனே என் காதலன்

என் உயிர் நீ தான் ..
என் உடல் நீதான் ...
என் மூச்சும் நீதான்...
என் பேச்சும் நீதான்...
என் நினைவும் நீதான்...
என் கனவும் நீதான்...
என் கணவனே..என் காதலனே...என் கண்ணாளனே...
நான் இன்று பிறந்திடகாரணம்
என் தாய்...
அவள் என்னை பத்து மாதம் சுமந்து
பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்தாள்...
இன்று வரை என்னை பத்திரமாக பார்த்து கொண்டாள்...
அவள் தந்த உணர்வுகள் யாரும் தர முடியாது என்றார்கள் ...
ஆனால்..
அதையும் மீறின உணர்வுகள் உன்னோடு...
தாங்க முடியாத கனவுகள் கண்ணோடு..
ஏங்க வைக்கும் நினைவுகள் நெஞ்சோடு..
விழுந்து விட்டேன் உன் விழியில்...
நடந்து வந்தேன் உன்னோடு உன் வழியில்...
உன் கைகள் என் கைகளோடு...
உன் கனவுகள் என் விழியோடு...
உன்னோடு நான் ...
என்னோடு நீ....
நம்மோடு நம் காதல் ...!!!