புரியவில்லை

சில நிமிடங்கள் ஆசை பேசட்டும்

சில நிமிடங்கள் அனுபவம் பேசட்டும்

சில நொடிகள் போதும் காதல் பேச

இங்கே வயதின் வியாதி கவிதை மருந்தால் குணமாக்கப்படூம்

பார்வையின் காயம் புன்னகையால் சரிசெய்யப்படும்

இதை வெட்கம் என்னும் பாத்திரம் ஏத்தி வரும்

அப்போது இந்த இளமை யோசிக்காது

எதையுமே யாசிக்காது

தன்னை முற்றிலுமாக,முலுவதுமாக,முலுவதுமாக எதாவது ஒரு

வடிவத்தில் பாதுகாப்பாய் பத்திரப்படுத்தும்

அதற்கு மொழிகள் வேண்டாம்

உருவம் வேண்டும்

உவமை கூட அவசியமில்லை

மஞ்சத்தில் மிஞ்சிய அச்சம் அவசரமில்லாம்

காதலை கலவரப்படுத்தும்

இரு நெஞ்சங்கள் மூச்சில் வெடிக்கும்

அக்னி குழம்புகள் எந்தபிரபஞ்சத்தை

அழிக்கவோ? யாரும் விடை அறியார்!!!!!

அங்கே ஒர் உன்னதம் உயிராகி கொண்டிருக்கும்

உரசல்களில் வார்த்தைகள் மௌனமாகி ஒடும்

அந்த தேடல்களில் தொலைந்து

இன்னும் அந்த ஆத்மாக்கள் கிடைக்கவேயில்லை

அலசல் சிணுங்கள் ஒடுதல்

புரியவில்லை இந்த புரிதலின் மோகம்!!!!

எழுதியவர் : nithya (20-Jul-11, 4:13 pm)
சேர்த்தது : nithyanithu
Tanglish : puriyavillai
பார்வை : 357

மேலே