தொலைகிறோம்....
மரணத்தில் ஜீவிக்கும் புது தைரியம்
திரும்ப எழுதமுடியாத புது காவியம்
அழகான சின்ன ஒவியம்
இதோ நீ பேசிய வார்த்தைகள் என் காதோரம் இன்னும் குறுகுறுக்கிறது
உனது நினைவுகள் எனது பருவத்தை
கொஞ்சம் தீண்டத்தான் செய்தது
எதுவே இல்லாமல் எல்லாம் நடக்கிறது
எல்லாம் இருந்தும் மௌனனம் பேசுகிறது
எனது தோழனே!!!
இதோ உனது கனவுக்காக மட்டுமே என் இரவு தூங்குகிறது
உன் நிழல் பார்க்கவே என் பகல் விரிகிறது
பேசாமலே காதல் வாழுமா?
பார்க்காமலே நம் உலகம் அழகாகுமா
சின்ன சின்ன எதார்த்தங்களோடும்
சின்ன சின்ன வார்த்தை பரிமாற்றங்களோடு
எப்படி நம்மால் சுகம் அனுபவிக்க முடிகிறதே
காதல் ஒரு கானல் குடுவை
அதை கொண்டு தான் நாம் எத்தனை
சுகங்களை குடிக்கிறோம்
மௌனமாக பல மொழிகள் பேசுகிறோம்
காதோரம் புரியாத ரகசியம் தேடுகிறோம்
இதமாக தொலைகிறோம்....