கடிதம்


உனக்கு கடிதம் எழுத நினைத்தேன்

வெடிகமாக இருந்தது என் எழுத்துகளுக்கு

கவிதையாக எழுதலாம் தான்

ஆனால் அது கடிதம் ஆகாதே

என் முகவரியை தொலைத்து உன் முகம் பார்க்கிறேன்

என் வீட்டு திண்ணையில் அமர்ந்து செல்

உன் எண்ணங்களோடு கை கோர்த்து காலார

நடக்க வேண்டும் உன் விருப்பப்படி

உன் சேலையோடு ஒட்டி கொண்டு

மேனி தொட வேண்டும் உன் வெட்கத்தை வேடிக்கைப் பார்க்க

எனக்கு எதுவுமே பிடிக்க மாட்டேன் என்கிறது

உன்னை பிடித்துப் போனதால்

முன்னுரை உன் கண்கள் போல் இருக்கவேண்டும்

முடிவுரை உன் சுண்டுவிரல் போல் இருக்கவேண்டும்

எதுவாக இருந்தாலும் கருத்து உன் இடையை போல் இருக்க வேண்டும்

தொட்டு தொட்டு பார்க்கிறேன்

உனக்கு எழுதியதால் என்னவோ அதுவும்

திமிராய்.....................................

சீ போ என்று மீண்டும் என்னை

எழுத விட மறுக்கிறது

மொத்தித்தில் உனக்கு கடிதம் எழுத

நான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்

உன்னிடம் படுக்கையில் .................

கற்று தருவாயா ?

எழுதியவர் : nithya (20-Jul-11, 4:23 pm)
சேர்த்தது : nithyanithu
Tanglish : kaditham
பார்வை : 301

மேலே