சிறை பிடி........ என்னை
என் காதல் வாடி போய்விட்டது
உன் காதலை ஊட்டு
கைவீசி நாம் நடந்த இ டங்கள்
எல்லாம் கத்துகின்றன
உன் கவிதை பேசும் விழிகளை காணாததால்
முன்பே இந்த ஏமாற்றம் வரும் என அறிந்திருந்தால்
என்னை நானே மாற்றியிருப்பேன்
உனக்கு கடிதம் எழுதலாம் என்றால்
அதை எங்கு அனுப்பிவது
தென்றலுக்கு ஏதடி முகவரி
தயவு செய்து என்னோடு கண்ணாம்பூச்சி ஆடுவதை
நிறுத்துக் கொள்
வா இளவஞ்சியே
என் இதயம் உனக்காக காத்திருக்கிறது
என் தனிமை என்னும் துன்பத்தை துடைத்தெரிய
வா என் அகல்விளக்கே
அங்கங்கள் அடுப்பாய் சுடுகிற்து
பயணங்கள் முடிவில்லாமல் தொடர்கிறது
என் பகல் கூட இருள்கின்றது
என்னை விற்று விற்று நீ சுகம் தின்னது போதும்
என்னை என்னை தொட்டு தொட்டு கவிதை எழுதியது போதும்
காதலுக்கு என்னை வாங்கு
கனவுக்கு கொஞ்சம் இரவு எழுது
பகலுக்கு உன் நிழல் தா
வெகுநேரம் அலைகிறது என் காதல்
உன் இதயம் என்னும் அறையில் சிறை பிடி........