வெகுநேரம்


இரவு வெகுநேரமாகி விட்டது

என் படுக்கை காலியாக கிடந்தது

தூக்கம் வேறு அலைகழித்தது

என்ன இன்று,

ஒவ்வொரு நொடியும் வேதனை

தான் மிஞ்சுமா

எப்போதும் துள்ளி கொண்டு வரும்

கனவு எங்கே

தேடி அவள் வாசம் வாங்கி வரும் தென்றல்

எங்கே

நிஜத்தோடு சண்டை போட்டு என்னை

தேடி வரும் அவள் நிழல் எங்கே

அய்யோ

என் இரத்த நாளங்கள் எல்லாம்

அவளை கேட்கின்றன

என் தலையணை கூட எனக்கு துரோகம்

செய்கிறது

எங்கே போனாள் அவள்

மார்கழி மாத குளிரை மேய்ந்து மேய்ந்து

என் மேனி சோர்ந்து விட்டது

உன் உஷ்ணததை தந்து சுறுசுறுப்பாக்கு

என்னோடு கண்ணாபூச்சி ஆடியது போதும்

வா என் கண்ணோடு கனவு காண்

எரிந்து கொண்டு இருக்கும் என் இரவை நீ வந்து அனைத்து விடு

என் இதழ்கள் உலர்ந்து விட்டன

உன் கண்ணீரால் ஈரமாக்கு

எழுதியவர் : nithya (20-Jul-11, 4:25 pm)
சேர்த்தது : nithyanithu
பார்வை : 303

மேலே