இப்போதாவது சொல்லி விடு
உன் விழிகள் அழகு என்பேன் உன் மொழிகள் அமிர்தம் என்பேன்
நடையில் அன்னத்தின் சாயல் என்பேன்
உடலில் மயில் தோகை விரித்தது என்பேன்
முகத்தில் எவ்வித சலனமும் காட்டி விடாமல் செல்வாய்
ஒரு புன்னகையாவது சிந்தமாட்டாயா என பல நாள் ஏங்கியிருக்கிறேன்
இன்று உன் தோழி அணிந்திருக்கும்
ஆடை அழகாய் இருக்கின்றது என்றேன் சாதாரணமாய்
உன்,கை பையை எடுத்து என்முன்னே வீசி
எறிந்து விட்டு "உன்னைக் கொன்று விடுவேன்"
எனப் பார்வைக் கணை வீசி விட்டுச் சென்றாயே
இத்தனை கோபம் எங்கிருந்து தான் வந்தது உனக்கு
நான் மெர்சல் ஆகி விட்டேன்
போதுமடி என் பூங்கோடியே !
அமைதி காத்தது போதும்
இவ்வளவு நாளும் நீ மூடி மறைத்த அந்த ஒன்றை
இப்போதாவது என்னிடம் சொல்லிவிடேன்
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
அதனால் என் மனம் குளிராதா ?
ஆக்கம்
அஷ்ரப் அலி