தடை அதை உடை
![](https://eluthu.com/images/loading.gif)
தடை அதை உடை
தாயின் மடியில் தவழும் போது,
தரையில் தவழ எத்தனித்தேன்...
தாயின் கரங்கள் தடைகள் போட
முதல் முயற்ச்சினிலே வீழ்ச்சியுற்றேன்!!!
தரையைத் தொட்டு தவழும்போது,
பாதம் ஊன்ற எத்தனித்தேன்......
கால்கள் தளர்ந்து தடைகள் போட,,
மீண்டும்,மீண்டும் தரையைத்தொட்டேன்!!!
கால்கள் ஊன்றி நடந்து போக,
ஓடிச்செல்ல எத்தனித்தேன்....
தரைகள் இடித்து தடைகள் போட,
வீழ்ந்து, வீழ்ந்து எழுந்து நின்றேன்!!!
பொறுமையாக அடிகள் நகர்த்த,
இறுதியாக ஓடிச்சென்று,
முதல்தடையைப் போட்டு தாண்டச் செய்த,
என் அண்ணை முகத்தில்,
எச்சில் கெண்டு கோலமிட்டேன்!!!
முதலில் போட்ட தடையினாலே,
இன்று வரை எத்தனித்து,
வெற்றிகொண்டு,வீரநடை போடுகிறன்றேன்!!!
உங்கள்
தௌபீஃக்