நல்ல மனம் வாழ்க

நல்ல மனம் வாழ்க !!!


உயிர்களிடத்து அன்பு வேண்டும் -- நல்ல
---- உணர்விது செழித்திடல் வேண்டும் .
பயிர்களிடத்தும் பாசம் வேண்டும் -- என்றும்
----- பகிர்ந்து உண்ணுதல் வேண்டும் .


மனிதநேயம் மலர்ந்திடல் வேண்டும் --- நாளும்
----- மங்காத வளங்கள் வேண்டும் .
பறவைகளிடத்து நேசம் வேண்டும் --- எந்நாளும்
----- பண்புடையவராய் வாழ்தல் வேண்டும் .


காக்கை , குருவி எங்கள் சாதி --- என்றான்
---- அன்றே நம் முண்டாசுக் கவிஞன் .
கணப் பொழுதில் அதனை அழிக்கின்றோம்-- இது
----- கண்களில் நீரினைப் பெருக்குதன்றோ ?


உலகினில் மாற்றங்கள் வேண்டும் -- என்றும்
----- உள்ளன்பு மிகுந்திடல் வேண்டும் .
விலங்குகளையும் நேசித்தல் வேண்டும் --- மாறாத
------ விருப்போடு நேசம் வேண்டும் .


வறுமை நிலையது மாற வேண்டும் -- மனிதம்
------- பேணிடும் நன்னெறி வேண்டும் .
சிறுமை கண்டு பொங்குதல் வேண்டும் - என்றும்
------- சிறப்புற நல்லமனம் வாழ்திடல் வேண்டும் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jul-17, 10:37 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 463

மேலே