தாலி

இவள் தான் நாங்கள் உனக்கு
தேர்ந்தெடுத்த வதுவை,
மாலையை மாற்றிக்கொள்
கட்டு அவள் கழுத்தில் இந்த
மஞ்சள் கயிற்றை, போடு
மூன்று முடிச்சுஏற்று தாலியாய்
என்று தாய் சொல்ல தாய் சொல்லை
தட்டாத பிள்ளையும் அப்படியே செய்தான்
இப்போது அவன் போட்ட மூன்று முடிச்சில்
சிக்கல்கள்-யார் சிக்கல்களை எடுப்பார்
சிக்கல்கள் தீர மீண்டும் சிக்கல் இல்லா
மஞ்சள் கயிற்றில் தாலி கோர்த்து
மூன்று முடிச்சு மாற்றி போட-அன்னை அவள்
நம்பும் பராசக்தியே இதற்கு தீர்வு சொல்வாளோ ?
கணவனைக் காக்கும் கொடி என்று
நங்கை அவள் நம்பி கும்பிட்டால்
ஆத்தாளும் அதற்க்கு வரம் தந்திடுவாள்
நம்பினால் தாலி நம்பாவிடில் வெறும் கயிறே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jul-17, 2:10 pm)
Tanglish : thaali
பார்வை : 78

மேலே