எச்சரிக்கை

மையங் கூட
மையமாய் இல்லை.
விலகித் தெரிகிறது.

ஐயம் கூடச் சரிதானா?
அதுவும் புரியவில்லை.

பொய்யும் உண்மையும்
கலந்து கிடக்கிறது.

நெய்யும் திரிகிறது.
நிழலும் மறைகிறது.

கையில் பெறுவதிலும்
கவனம் வேண்டியிருக்கிறது.

உய்வு என்பது
உய்வாயில்லை.

வெயில் சூடு
“வீட்டுக்குள்ளும்”.

பையில் இருப்பது
பத்திரம்.

எழுதியவர் : கனவுதாசன் (24-Jul-17, 9:49 pm)
Tanglish : yacharikkai
பார்வை : 88

மேலே